உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மே 2 ல் திருக்கல்யாணம்

பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மே 2 ல் திருக்கல்யாணம்

பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 22 இரவு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

மேலும் ஏப்., 23 காலை கோயில் தங்க கொடிமரத்தில் நந்தி கொடியேற்றப்பட்டு, மாலை சிம்மாசனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கற்பகத்தரு, கிளி, பூத, சிங்க, குதிரை, கைலாச, காமதேனு, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அருள் பாலிக்கிறார். ஏப்., 29 நடராஜர் வீதி உலா, மறுநாள் பிச்சாண்டவர் புஷ்ப சப்ரத்தில் வலம் வருகிறார். மே 1 விசாலாட்சி அம்மையுடன் சந்திரசேகரன் அருள்பாலித்து, திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. மே 2 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், இரவு 8:00 மணிக்கு யானை மற்றும் பூ பல்லக்கில் வீதி வலம் வர உள்ளனர். மே 3 காலை 9:30 மணிக்கு சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது. மே 4 கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வராள் முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !