உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி கோவில்களில் குரு பெயர்ச்சி விழா

கள்ளக்குறிச்சி கோவில்களில் குரு பெயர்ச்சி விழா

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில் நேற்று குருபெயர்ச்சி விழா வழிபாடுகள் நடத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை கணபதி யாகம், குரு கலசங்கள் ஆவாஹனம் செய்யப்பட்டு யாகம் நடந்தது. இரண்டு கால யாகசாலை பூஜைகளுக்குப் பின் நள்ளிரவு 11 மணிக்குமேல் குரு பகவானுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் செய்யப்பட்டது. பரிகார அர்ச்சனைகளுக்குப் பின் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதேபோன்று, கங்கையம்மன், கமலா நேரு தெரு காமாட்சி அம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், தண்டலை சுயம்பு நாதீஸ்வரர், முடியனுார், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !