திருக்கோஷ்டியூரில் திருமந்திரம் உபதேசித்த ராமானுஜருக்கு மங்களாசாசனம்
ADDED :942 days ago
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ராமானுஜருக்கு மங்களாசாசனம் நடைபெற்றது.
திருக்கோஷ்டியூரில் திருமந்திரம் உபதேசித்த ராமானுஜர் 1006 வது பிறந்த நாளை முன்னிட்டு மங்களாசாசனம் நடந்தது. நேற்று மதியம் 12.00 மணி அளவில் ராமானுஜர் சன்னதியிலிருந்து கல்யாண மண்டபத்தில் பெருமாள் முன்பு எழுந்தருளினார். இருவருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து மங்களாசாசனம் நடந்து. பின்னர் மீண்டும் சன்னதி எழுந்தருளி நாலாயிர திவ்ய பிரபந்தம் சாத்துமுறை நடந்து கோஷ்டி விநியோகம் நடந்தது.