உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் கம்பம் நடுதல் நடந்தது.

அன்னூர் மாரியம்மன் கோவிலில் 33ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 18ம் தேதி விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 25ம் தேதி காலையில் கணபதி ஹோமம் நடந்தது. மாலையில் காப்பு கட்டுதலும், கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடந்தது. ஜமாப் இசை நிகழ்ச்சியுடன் பக்தர்கள் கோவிலை சுற்றி ஆடியபடி பூவோடு எடுத்து பங்கேற்றனர். இதில் அன்னூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று பூவோடு எடுத்தலும், அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், அலங்கார பூஜையும், தீபாராதனையும் நடந்தது. நாளை மாலை 6:30 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து பிரசித்தி பெற்ற பவளக் கொடி கும்மி ஆட்டம் நடக்கிறது. வரும் மே 2ம் தேதி காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலையில் செண்டை மேளம், வான வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !