கோவில் விழாவில் பக்தர்களின் தாகம் தீர்க்க நீர் மோர் வழங்கல்
ADDED :942 days ago
சூலூர்: பொன்னாக்காணி கோவில் விழாவில் பங்கேற்ற பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில், கோ - சேவா சமிதியினர் நீர் மோர் வழங்கினர்.
பொன்னாக்காணி ஸ்ரீ மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து வருகிறது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர். வெய்யிலின் தாக்கத்தால், குடிநீரின் தேவை அதிகமாக இருந்தது. இதையடுத்து, செஞ்சேரிமலை கோ சேவா சமிதி சார்பில், கோவில் வளாகத்தில் நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க, நீர் வழங்கும் பணி நடக்கிறது. துவக்க நிகழ்ச்சியில், கோவில் கமிட்டியினர், சமிதி நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தாகம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பக்தர்கள் நன்றி கூறினர்.