உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அர்ச்சுனன் திருக்கல்யாண வைபோகம்

திரவுபதி அர்ச்சுனன் திருக்கல்யாண வைபோகம்

சோழவந்தான்: சோழவந்தான் பெரியகடை வீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் 11 நாள் பூக்குழி பிரம்மோற்சவ விழாவில் திரவுபதி அர்ச்சுனன் திருக்கல்யாண வைபோகம் நடந்தது.

முன்னதாக வடக்குரத வீதி பொதுமக்கள் மேளதாளம் முழங்க அதிர்வேட்டு வெடித்து சீர்வரிசை சுமந்து ஊர்வலம் வந்தனர். இதையடுத்து பிரசாந்த் சர்மா பட்டர் தலைமையில் யாக பூஜைகள் நடந்தது. இக்கோயில் வளாகத்தில் அர்ச்சுனனுக்கும் திரவுபதி அம்மனுக்கும் பரம்பரை பூசாரிகள் தலைமையில் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. இதையடுத்து சுவாமி சமேதராய் கன்னி ஊஞ்சாலாடினர். இத்திருக்கல்யாண விழாவினை செயல் அலுவலர் இளமதி, வசந்த், பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதையடுத்து அர்ச்சுனன் பிரதர்ஸ் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. சுவாமி சமேதராய் வீதியுலா புறப்பாடானது. இதில் உபயதாரர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !