திருப்பரங்குன்றம் கோயிலில் கருட வாகனம் புதுப்பிப்பு
ADDED :1008 days ago
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தன்று மதுரை சுவாமிகளுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பவளக் கனிவாய் பெருமாள் புறப்பாடாகும் கருட வாகனம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பாண்டிய ராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடனும், தாரை வார்த்து கொடுக்க பவள கனிவாய் பெருமாளும் மே 1ல் குன்றத்திலிருந்து புறப்பாடாகின்றனர். திருக்கல்யாணத்தன்று இரவு மதுரை சுவாமிகளுடன் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையும், கருட வாகனத்தில் பவள கனிவாய் பெருமாளும் புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் அருள் பாலிப்பர். அதற்காக திருப்பரங்குன்றம் கோயிலில் கருட வாகனம் புதுப்பிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது.