உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜார்க்கண்ட் ஆளுநர் தரிசனம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜார்க்கண்ட் ஆளுநர் தரிசனம்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம்  செய்தார். முன்னதாக கவர்னர் ராதாகிருஷ்ணன் கோயில் வளாகத்தில் உள்ள பாதாள விநாயகரை தரிசனம் செய்து.  சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.

 ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் ஸ்ரீகாளஹஸ்தி க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ பாதாள விநாயகரை தரிசித்து சிறப்பு பூஜை செய்தார்.  ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணாவை, கோவில் அதிகாரிகள் வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு, தரிசனத்திற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.  சி.பி.ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்தினருடன் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும்  தரிசித்து சிறப்பு பூஜைகள் செய்தார்.  தரிசனம் முடிந்ததும் வேத பண்டிதர்கள் அவர்களுக்கு ஆசி வழங்கி தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.  முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணா தனது குடும்பத்தினருடன் பாதாள விநாயகர் சன்னதியில் 30 படிகள் இறங்கி பாதாள விநாயகரை தரிசனம் செய்தார்.  பாதாள விநாயகர் சன்னதியில் கணபதி நாமங்களை நினைத்து பூஜைகள் நடத்தினர். பாதாள கணபதியை தரிசிப்பது புண்ணியமானது என்றும், பாதாள கணபதியை தரிசனம் செய்வதில் உடல் வடிவம் சீராக இருக்வும், நம் கலாச்சார மரபுகளுக்கு சான்றாகும் என்றும், பெரியவர்களுக்கு மரியாதை மற்றும் பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கூறினார்.  வாயுலுங்கேஸ்வரர் சந்நிதிக்கு வந்து பூஜைகள் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் மன அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !