உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தஞ்சாவூர், சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோவிலில், சித்திரை பெருவிழாயொட்டி கொடியேற்றம் நடந்தது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி முருகன் கோவிலில், சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, யானை உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக, உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். தொடர்ந்து வரும் 2ம் தேதி தன்னைத்தானே பூஜித்தலும்,6ம் தேதி தேரோட்டமும் ,7ம் தேதி  திருவீதி உலா மற்றும் தீர்த்த வாரியும் நடைபெறுகிறது. 8ம் தேதி விழா நிறைவடைந்து, யதாஸ்தான செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !