சுசீந்திரம் தாணுமாலையர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
ADDED :934 days ago
நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் மூலவராக அருள்பாலிக்கும் இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 21–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று காலை 8:20 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் மேயர் வழக்கறிஞர் மகேஷ் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். பிள்ளையார் தேரில் விநாயகர்,அம்மன் தேரில் சுவாமி,தேவேந்திரன் தேரில் அம்பாள் என மூன்று தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். பத்தாம் நாள் விழாவான நாளை இரவு எட்டு மணிக்கு கோயிலின் வலதுபுறம் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுகிறது. இதற்காக தெப்பக்குளம் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.