சேஷ வாகனத்தில் திருவள்ளூர் வீரராகவர் அருள்பாலிப்பு
ADDED :934 days ago
திருவள்ளூர் ; திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சேஷ வாகனத்தில் வீரராகவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.