உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் நாளை விசாலாட்சி, மீனாட்சி திருக்கல்யாணம்

பரமக்குடியில் நாளை விசாலாட்சி, மீனாட்சி திருக்கல்யாணம்

பரமக்குடி: பரமக்குடி சித்திரை திருவிழாவில் சிவன் கோயில்களில் விசாலாட்சி மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் ஏப்., 24 கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இக்கோயிலில் நேற்று காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வளமுடன். மாலை சுவாமி அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திக் விஜயம் நடந்தது. இன்று தபசு திருக்கோளமும் நாளை காலை 11:00 - 12:00 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. *பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மே 23 துவங்கி விழா நடக்கிறது. நேற்று காலை பிச்சாண்டவர் புஷ்ப சப்பரத்தில் வலம் வந்தார். இன்று திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. நாளை மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரண்டு கோயில்களிலும் இரவு சுவாமி, அம்பாள் பட்டணப்பிரவேசம் வர உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !