உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா

பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா

திருப்பூர்; பிச்சம்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில், சித்திரை பூச்சாட்டு பொங்கல் விழாவையொட்டி, நேற்று லட்சார்ச்சனை நடைபெற்றது.

மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த மாதம் 17ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி கம்பம் நடப்பட்டது; தினமும் அபிேஷக பூஜை நடந்து வருகிறது. கடந்த வாரம், 108 கலச அபிேஷகம், திருவிளக்கு பூஜை, நவசக்தி அர்ச்சனை நடந்தது. நேற்று, லட்சார்ச்சனையும் மகா தீபாராதனையும், கொங்கு பண்பாட்டு மையத்தின் பெருஞ்சலங்கை ஆட்டமும் நடந்தது. இன்று காலை, அக்னி அபிேஷகம், விநாயகர் மற்றும் அம்மன் படைக்கலம் எடுக்கும் நிகழ்ச்சியும், நாளை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !