சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோயிலில் கருட சேவையில் வீதியுலா
ADDED :927 days ago
கடலுார்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளில் கருட சேவையில் பெருமாள் வீதியுலா நடந்தது.
கடலுார் அடுத்த சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. 5ம் நாள் உற்சவமான நேற்று காலை பல்லக்கில் வீதியுலா, இரவு கருட சேவையில் வீதியுலா நடந்தது. வரும் 4ம் தேதி காலை 4:30 மணிக்கு மேல் 5:30 மணிக்குள் ரதத்தில் பெருமாள் புறப்பாடாகி, தேரோட்டம் நடக்கிறது.