உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நிறைவு

கெங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நிறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் வெள்ளைகுளம், கெங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா கடந்த 30ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

மதியம் 12:00 மணிக்கு கன்னியம்மனுக்கு காப்பு கட்டுதலும், மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். இரண்டாம் விழாவான கடந்த 1ல் காலை 9:00 மணிக்கு பால்குட ஊர்வலமும், இரவு 9:00 மணிக்கு பம்பை குழுவினருடன், கரகாட்டம், நையாண்டி மேளம், சிலம்பாட்டம், பக்கவாத்தியங்களுடன் அம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது. மூன்றாம் நாள் விழாவான நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், இரவு 8:00 மணிக்கு மலர் அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய கெங்கையம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். ஜாத்திரை திருவிழா நிறைவு நாளான நேற்று, காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 9:00 மணிக்கு நாடகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !