பக்தர்கள் கையில் விபூதி வழங்க அறநிலையத்துறை அறிவுறுத்தல்
ADDED :887 days ago
கிருஷ்ணகிரி: விபூதி பிரசாதத்தை, பக்தர்கள் கையில் மட்டுமே வழங்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மதர் தெரசா என்ற கிறிஸ்தவ கன்னியாஸ்திரி படம் பொறித்த கவரில் விபூதி, குங்கும பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. அந்த விவகாரம், அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட கோவில்களில் விபூதி, குங்கும பிரசாதத்தை பக்தர்களின் கையில் மட்டுமே வழங்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கோவில் செயல் அலுவலரால் அனுமதி வழங்கப்பட்ட விபூதி, குங்கும பிரசாத கவர்களை கோவில் வளாகத்தில் குருக்கள் வைத்து விடுகின்றனர். விபூதியை பக்தர்களே கவரில் எடுத்து செல்கின்றனர்.