காளஹஸ்தி லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் ஜெயந்தி விழா
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் , காளஹஸ்தி சிவன் கோயில் அருகில் உள்ள ஸ்ரீ பக்த கண்ணப்ப மலை உச்சியில் உள்ள லட்சுமிநரசிம்மசுவாமி கோயிலில் ஜெயந்தி விழாவை ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் முன்னிலையில் சிறப்பாக நடத்தப்பட்டது.
பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி தேவஸ்தானத்தின் துணை கோயிலான ஸ்ரீ பக்த கண்ணப்பர் மலை மீது உள்ள ஸ்ரீ லட்சுமிநரசிம்மசுவாமி சன்னதி யில் ஜெயந்தி விழா, ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் சார்பில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ லட்சுமிநரசிம்மசுவாமிக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின்னர் தேவஸ்தான அர்ச்சகர்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். ( பால், தயிர், சந்தனம், இள நீர் மற்றும் கலச நீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்ததோடு தூப தீப கற்பூர ஆரத்திகள் எடுத்தனர்.இந் நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்ரீதேவி, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர் நாகபூஷணம், கோவில் ஆய்வாளர் ஹரி யாதவ், தேவஸ்தான துணை தலைமை அர்ச்சகர் தட்சிணாமூர்த்தி, வேத பண்டிதர் அர்த்தகிரி, உபயதாரர்கள் தர்ப்ப துளசி, ராகேஷ் சர்மா மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.