உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை சித்ரா பவுர்ணமி விழா ; மண்டூக மகாமுனிக்கு வரமளித்த பெருமாள்

வடமதுரை சித்ரா பவுர்ணமி விழா ; மண்டூக மகாமுனிக்கு வரமளித்த பெருமாள்

வடமதுரை: வடமதுரை சவுந்தரரராஜப் பெருமாள் கோயிலில் 73ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா துவங்கியது. இந்தாண்டு விழாவிற்காக கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்ட பெருமாள் சுவாமி, பால்கேணி சென்று மண்டூக முனிவருக்கு வரமளித்தார். இதனை தொடர்ந்து வடமதுரை நகருக்குள் சென்று பல்வேறு திருக்கண்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கண்களில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் மே 7 இரவு வரை நடக்கும். மே 8 காலை சுவாமி சன்னதி திரும்புவார். விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் முருகன், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !