சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்
ADDED :944 days ago
கூடலுார்: கூடலுார் பொதுப்பணித்துறை ஆய்வாளர் மாளிகை அருகே ஸ்ரீ சாய் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக மகா கணபதி ஹோமம், திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, 4 கால யாக பூஜை நடந்தது. யாகசாலை பூஜை நேரங்களில் சதுர்வேத பாராயணமும், ராக தாள ஆவர்த்தனங்களும் நடைபெற்றது. மகா கணபதி, தத்தாத்ரேயர், துவாரகமாயி, ஆஞ்சநேயர் ஆகிய மூலஸ்தான மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. நாராயண சேவை, அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாய் சேவா டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி குமார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.