/
கோயில்கள் செய்திகள் / மருதா நதியில் இறங்கிய வரதராஜ பெருமாள் ; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
மருதா நதியில் இறங்கிய வரதராஜ பெருமாள் ; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
ADDED :854 days ago
பட்டிவீரன்பட்டி: ய்யம்பாளையம் மருதா நதியில் சித்தரேவு வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா 4ல் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான பெருமாள் அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 7 மணி அளவில் நடந்தது. திரளான பக்தர்கள் அழகரை கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர். அங்கு பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு யாதவர் குல எதிர் சேவை நடந்தது. பின் பெருமாள் அழகர் பொட்டலில் தங்கி பின்பு அய்யம்பாளையம் ஆயிர வைசிய மண்டகப்படியில் தங்கினார்.