/
கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு சேது நாராயணப் பெருமாள் கோயிலில் மூலக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளல்
வத்திராயிருப்பு சேது நாராயணப் பெருமாள் கோயிலில் மூலக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளல்
ADDED :1219 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயிலில் மூல கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளல் வைபவம் நடந்தது.
இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் வேடத்தில் அவதரித்த பெருமாள், அவ்வேடத்தை கலைந்து மீண்டும் பெருமாளக அவதரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன்படி பெருமாளாக அவதாரம் எடுத்து மூலக்கருட வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். அவருக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆபரணங்கள் அமைக்கப்பட்டது. பின்னர் வீதி உலா நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் பக்த சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.