உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தந்தி மாரியம்மன் திருவிழா கிராமிய நடனங்களுடன் ஊர்வலம்

தந்தி மாரியம்மன் திருவிழா கிராமிய நடனங்களுடன் ஊர்வலம்

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், கிராமிய நடனங்களுடன் ஊர்வலம் நடந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. இதில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சார்பில் சித்திரை தேர் ஊர்வலம் நடந்தது. சிறப்பு விருந்தினராக அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் சமூக தலைவர் ஜான் பாண்டியன் பங்கேற்றார். குன்னூர் சுப்பிரமணியர் கோவிலில் இருந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்களுடன், மேள தாளங்கள் முழங்க முளைப்பாரி ஊர்வலம், மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு, அபிஷேகம், அலங்காரம், அம்மன் ஊர்வலம் நடந்தது. விநாயகர் கோவில் மண்டபத்தில் அன்னதானம், கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !