வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை
ADDED :13 hours ago
நெல்லிக்குப்பம்: வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம், வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு யாகம் நடத்தினர். இதையொட்டி, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் நடத்தி சங்காபிஷேகம் செய்தனர். மூலவர் வள்ளி தேவசேனா சமேதராய் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல, அய்யப்பன் பூலோகநாதர், வரசித்தி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.