/
கோயில்கள் செய்திகள் / முருகன் கோவில்களில் கிருத்திகை உத்சவம் கோலாகலம்: மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
முருகன் கோவில்களில் கிருத்திகை உத்சவம் கோலாகலம்: மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :13 hours ago
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி கோவிலில் இன்று மார்கழி மாத கிருத்திகையை ஒட்டி, காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதே போல், அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் சுப்ரமணிய சுவவாமி மலைக்கோவில், பள்ளிப்பட்டு அடுத்த கார்வேட்நகரம் குமரகிரி சுப்ரமணிய சுவாமி கோவில்களிலும், இன்று கிருத்திகை உத்சவம் கோலாகலமாக நடந்தது. நெல்லிக்குன்றம் மலைக்கோவிலில், மாலை 6:00 மணிக்கு உத்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், உள்புறப்பாடு எழுந்தருளினார். திரளான பக்தர்கள், ‛அரோகரா... அரோகரா’ கோஷம் எழுப்பினர்.