பாலமேடு வீரமாகாளியம்மன் கோயில் உற்ஸவ விழா
ADDED :983 days ago
பாலமேடு: பாலமேடு அருகே டி.மேட்டுப்பட்டி வீரமாகாளியம்மன் கோயில் 39ம் ஆண்டு உற்ஸவ விழா நடந்தது. நாயுடு மகளிரணி சார்பில் உலக நன்மை வேண்டி நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். நேற்று இரவு நையாண்டி மேளம் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் கரகம் அழைத்து வந்தனர். பால்குடம், மாவிளக்கு, அக்னிச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்து, கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அபிஷேக, ஆராதனையை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை நாயுடு மகாஜன சங்கம் மற்றும் மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.