வீரபாண்டி திருவிழாவிற்காக தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்
ADDED :981 days ago
கூடலுார்: கூடலுாரில் வீரபாண்டி திருவிழாவிற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வீரபாண்டி திருவிழா நேற்று துவங்கியது. இதனைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கூடலுாரில் நூற்றுக்கணக்கானோர் தீச்சட்டி எடுத்தனர். வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள காளியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபட்ட பின் வீரபாண்டிக்குச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தெற்கு கருணாநிதி காலனியிலிருந்து, வடக்கு காளியம்மன் கோயில் வரை மாநில நெடுஞ்சாலையில் தீச்சட்டி ஊர்வலத்துடன் நடந்து செல்லும் பக்தர்களுக்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஹிந்து முன்னணி, பாரதீய கிசான் சங்கம், தர்ம ஜாக்ரண், பிள்ளையார் கோயில் இளைஞர் அணி பக்தர்கள் பல இடங்களில் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கினர்.