திருப்புத்தூரில் பூச்சொரிதல் விழா; பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வழிபாடு
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் திரளாக பக்தர்கள் அம்மனுக்கு பூத்தட்டு எடுத்து வழிபட்டனர்.
இக்கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து நகரின் பல பகுதிகளிலும் பக்தர்கள் பூத்தட்டுகள், பால்குடம், பாரி, மதுக்குடங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர். மேலும் கோயில் நடை சார்த்தாமல் இரவிலும் அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. நகரின் பல பகுதிகளிலும் இன்னிசை,பாடல், நாடக நிகழ்ச்சிகள் நடந்தன. மின்னொளி அலங்கார வாகனத்தில் அம்மன் முக்கிய தெருக்களில் உளர்வலம் வந்தது. இன்று இரவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்து கொடியேற்றப்பட்டு காப்புக்கட்டி வசந்த பெருவிழா துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும்.