திருத்தணி முருகன் கோவிலில் காவடிகளுடன் பக்தர்கள் தரிசனம்
ADDED :993 days ago
திருத்தணி:கோடை விடுமுறையை ஒட்டி, திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள பொன்னியம்மன் தேவஸ்தானம் சார்பில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், மொட்டை அடித்து மயில், மலர் காவடிகளுடன், நேற்று திருத்தணி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். உற்சவர் முருகப் பெருமானுக்கு காவடிகள் செலுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். முன்னதாக, காலை 8:00 மணி, மதியம், 12:00 மணி மற்றும் மாலை 5:00 மணி ஆகிய மூன்று வேளையில் மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.