இருவருக்கும் பொறுப்பு உண்டு
ADDED :937 days ago
இல்வாழ்க்கை ஒருவழிப் பாதையல்ல. கணவனும், மனைவியும் அவரவர் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், இல்லறப் படகு இனிதே செல்லும். ‘உரிமைக்குக் குரல் கொடுப்பேன். கடமைக்கு விடை கொடுப்பேன்’ என்ற நிலையை பின்பற்றினால் கஷ்டம். எனவே அவரவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அக்கறையோடு நிறைவேற்ற வேண்டும்.
* ஆண்களுக்கு பெண்கள் மீது சில உரிமைகள் உள்ளன. பெண்களுக்கு ஆண்கள் மீது சில உரிமைகள் உள்ளன.
* உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும் பாதுகாவலரும் ஆவார்.
* உங்களது கண்காணிப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் மறுமையில் கேள்வி கேட்கப்படும்.