உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகோதரருக்கு உதவுங்கள்

சகோதரருக்கு உதவுங்கள்


* சகோதரருக்கு உதவுங்கள். அவர் அநீதி இழைப்பவராக இருந்தாலும், அநீதி இழைக்கப்படுபவராக இருந்தாலும் சரி.
* துன்பம் ஏற்பட்டுவிட்டது என்பதற்காக தனக்கு மரணம் வர வேண்டும் என ஆசை கொள்ளாதீர்கள்.
* மக்களிடம் அவர்களின் குணத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள்.
* மனிதன் தன்னுடைய நண்பனின் வழி எதுவோ, அதில்தான் இருப்பான்.
* கொடுக்கல், வாங்கலின் போது மென்மையாகவும், பெருந்தன்மையோடும் நடந்து கொள்ளுங்கள்.
* ஊசி, நுால் போன்ற பொருட்களை கடனாக பெற்றால்கூட, அவற்றை திரும்பக்கொடுத்து விடுங்கள்.
* வியாபாரத்தில் அதிகமாக சத்தியம் செய்வதைத் தவிருங்கள்.  
* மரணமடைந்தவர்களை பற்றி தவறாக பேசாதீர்கள். அவர்கள் செய்த செயல்களுக்கு பலன் கிடைத்துவிட்டது.
* பிறருடைய கால்நடைகளின் பாலை அவர்களின், அனுமதியின்றிக் கறக்க வேண்டாம்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !