உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளமடை தர்மராஜா கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றம்

வெள்ளமடை தர்மராஜா கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடையில் உள்ள தர்மராஜா கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பழமையான தர்மராஜா கோவில் வெள்ளமடையில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், வைகாசி மாதம் பூச்சாட்டுடன் குண்டம் திருவிழா நடக்கும். நேற்று ஊர் பெரியோர்கள் முன்னிலையில் அனுமன் கொடியேற்றம் நடந்தது. மாலை குந்திமா தேவியை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இம்மாதம், 13ம் தேதி கிராம சாந்தியும், 18ம் தேதி பொங்கல் மற்றும் சக்தி கரகம் அழைத்தலும், 21ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 23ம் தேதி குண்டம் திறத்தல், கரகம் புறப்பாடு தொடர்ந்து, 24ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி, 25ம் தேதி மாடுபிடி சண்டையும், 27ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !