பூச்செரிதல் விழா : ராமேஸ்வரத்தில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்
ADDED :880 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பத்திரகாளியம்மன் கோயிலில் நடந்த பூச்செரிதல் விழாவில் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். நேற்று கடைசி சித்திரை வெள்ளி யொட்டி ராமேஸ்வரம் திருக்கோயில் உபகோயிலான பத்திரகாளியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பால்குடம், தீச்சட்டி, வேல் காவடி எடுத்து ராமநாதசுவாமி கோயில் நான்கு ரத வீதியில் ஊர்வலமாக வந்து பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் அம்மனுக்கு நடந்த மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.