ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை
ADDED :991 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜர் சன்னதியில் நேற்று சித்திரை திருவோணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு அபிேஷகங்கள் நடந்தன. சிவகாமி அம்மனுடன் நடராஜர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவாச்சாரியார் ரவி குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.