திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 23ல் பங்குனி பெருவிழா துவக்கம்
சென்னை: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா, 23ம் தேதி இரவு 9:30 மணி முதல் 11:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. தினமும் பல்வேறு சேவைகள், சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும் 29ம் தேதி காலை 7:10 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. வரும் 30ம் தேதி மாலை பரிவேட்டை விழாவும், 31ம் தேதி கல்யாணசுந்தரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்று மாலை அகத்தியருக்கு திருமணக் காட்சி நடக்கிறது. சந்திரசேகரர் கடல் நீராடல் உத்சவம், ஏப்., 1ம் தேதி காலை நடக்கிறது. அன்று இரவு திரிபுரசுந்தரசுந்தரி- – தியாகராஜர் திருக்கல்யாண வைபவத்துடன் கொடியிறக்கப்படுகிறது. தொடர்ந்து, வான்மீகி முனிவருக்கு, 18 திருநடனக் காட்சியருளி வீடுபேறு அளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் கடைசி நாளான, ஏப்., 2 மாலை, சந்திரசேகர் தெப்பத் திருவிழா, இரவு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, 18 திருநடன காட்சி ஆகியவை நடக்கின்றன.