சக்தி பாலநாகம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா
ADDED :914 days ago
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே அசோகபுரம் வி.கே.வி., நகரில் உள்ள சக்திபால நாகம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது.
விழாவை ஒட்டி, 9ம் தேதி ஊர் காப்பு கட்டுதல், திருவிளக்கு வழிபாடு மற்றும் தீபாராதனை, அம்மன் திருவீதி உலா நடந்தது. மறுநாள் சக்தி வலம்புரி விநாயகருக்கு அபிஷேகம், அலங்கார பூஜை தொடர்ந்து சக்தி கரகம் அழைத்தல், பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. பகல், 11:00 மணிக்கு சக்தி பால நாகம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு சக்தி வலம்புரி விநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து ஊர்வலம் வருதல், சிறப்பு பஜனை மற்றும் தீபாராதனை நடந்தது. மறுநாள் மஞ்சள் நீராடுதல் மறுபூஜையுடன் விழா நிறைவடைந்தது.