உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பராயனுக்கு படையல் பூஜை

கருப்பராயனுக்கு படையல் பூஜை

போத்தனூர்: போத்தனூர் அடுத்த கணேசபுரத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில், 37 ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த, 1ல் துவங்கியது. 12ல் 108 வலம்புரி சங்கு பூஜை, மறு பூஜை மற்றும் அன்னதானத்துடன் முடிவடைந்தது. தொடர்ந்து நேற்று கோவில் வளாகத்தில் தனி சன்னதியிலிருக்கும் கருப்பராயனுக்கு திருவிழா நல்முறையில் முடிந்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக கிடா வெட்டப்பட்டது. அப்போது இதர தெய்வங்களின் சன்னதிகள் திரையிடப்பட்டு மூடப்பட்டன. இதையடுத்து உணவு சமைக்கப்பட்டு, கருப்பராயனுக்கு மதுவுடன் படையல் படைத்து பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து விழா குழுவினர், கோவில் கமிட்டியினர் உள்ளிட்டோருக்கு விருந்து கொடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !