உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 22ம் தேதி திருத்தேர் உற்சவம் நடக்க உள்ளது.

வரலாற்று பிரசித்தி பெற்ற சிங்கவரம் ரங்கநாதர் கோவில் 10 நாட்கள் பிரம்மேற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருஞ்சனம் நடந்தது. தொடர்ந்து வேள்வியும் காலை 8.30 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர் சூர்ய பிரபையில் சாமி வீதி உலா நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், உபயதாரர் திருஞானசம்மந்தம், தேர் திருப்பணிக்குழு முன்னாள் தலைவர் குணசேகர், ஊராட்சி தலைவர் பராசக்தி தண்டபாணி, விழா குழுவினர் ரங்கராஜ், இளங்கீர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை (17 ம்தேதி) சிம்ம வாகனத்திலும், 18 ம் தேதி அனுமந்த வாகனத்திலும், 19ம் தேதி சேஷ வாகனத்திலும், 20ம் தேதி பெரிய திருவடி எனும் கருடசேவையும், 21ம் தேதி யானை வாகனமும், 22ம் தேதி முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தலும், 23ம் தேதி குதிரை வாகனமும், 24ம் தேதி சந்திர பிரபையில் சாமி வீதி உலாவும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !