உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தம்புராட்டியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

தம்புராட்டியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

அவிநாசி; கந்தம்பாளையம் தம்புராட்டியம்மன், ஸ்ரீ கருப்பராயர், பேச்சியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் நேற்று கோலாகலமாக நடந்தது.

அவிநாசி வட்டம், கந்தம்பாளையத்தில், 2 ஆயிரம் ஆண்டு பழமையான தம்புராட்டி அம்மன், ஸ்ரீ கருப்பராயர், பேச்சியம்மன் கோவில் உள்ளது. இதன் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த 11ம் தேதி 100ம் மேற்பட்ட பெண்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின், முதல் கால மற்றும் இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்று, கல்யாணபுரி ஆதினம் கூனம்பட்டி ஸ்ரீலஸ்ரீ நடராஜ ஸ்வாமிகள் முன்னிலையில், அன்பு கிருபாகர சுப்ரமணிய சிவாச்சார்யார், குமார சுப்ரமணிய சிவாச்சார்யார் தலைமையில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !