திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருநாவுக்கரசர் குரு பூஜை
ADDED :900 days ago
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், திருநாவுக்கரசர் குருபூஜை விழா நேற்று நடந்தது.
சித்திரை மாத சதயம் நட்சத்திரத்தில், அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை வழிபாடு நடத்தப்படுகிறது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 63 நாயன்மார் வரிசை மற்றும் நால்வர் பெருமக்கள் வரிசையில் உள்ள திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள், குருபூஜை வழிபாடுகளை செய்தனர்; சிவனடியார்கள், ஓதுவாமூர்த்திகள், அப்பர் தேவார பாடல்கள் மற்றும் திருத்தொண்டத்தொகை பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.