ஆதிகாளி, புற்றுமாரியம்மன் கோவிலில் குண்டம் விழா
ADDED :899 days ago
கிள்ளை : கிள்ளை அருகே ஆதிகாளி, புற்றுமாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமானவர்கள் தீமித்து, நேர்த்திக்கடன், செலுத்தினர்.
கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் உள்ள ஆதிகாளி, புற்றுமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவுதீமிதி திருவிழா நடந்தது. அதையொட்டி, கடந்த 5ம் தேதி கொடியேற்றப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள், நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், கோவில் முன்பு தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து, நேர்த்திக்கடன், செலுத்தினர். தில்லைவிடங்கன் கிராமத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, விழா குழுவினர்கள், கிராம நிர்வாகிகள், செய்திருந்தனர். கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.