உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிடாரி அம்மன் கோயில் திருவிழா

பிடாரி அம்மன் கோயில் திருவிழா

மேலுார்; திருவாதவூர் பிடாரி அம்மன் கோயில் திருவிழா மே 9 கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து பிடாரியம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் நேற்று கோயிலில் பக்தர்கள் பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பிடாரி அம்மன் சட்டத்தேரில் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (மே 17) கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !