/
கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர், சூரக்கோட்டை சுத்தரத்தினேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.111 கோடி நிலம் மீட்பு
தஞ்சாவூர், சூரக்கோட்டை சுத்தரத்தினேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.111 கோடி நிலம் மீட்பு
ADDED :898 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் உள்ள சுத்தரத்தினேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 111 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில், சுத்தரத்தினேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான புன்செய் 134.10 ஏக்கர், நன்செய் 13.73 ஏக்கர், கோவில் புறம்போக்கு 0.01 சென்ட் என மொத்தம் 147.84 ஏக்கர் நிலங்களை, சுமார் 120 பேர் ஆக்கிரமித்து, விவசாய நிலங்களாகவும், வீட்டு மனையாகவும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.