அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரதோஷ வழிபாடு
ADDED :1244 days ago
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி ராஜகோபுரம் அருகே உள்ள நந்தி பெருமானுக்கு பாலபிஷேகம், சந்தன அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெரிய நந்திய பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷத்தையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் கோவில் உள்பிரஹாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பத்கர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.