உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தத்தில் பிரதோஷ விழா

நத்தத்தில் பிரதோஷ விழா

நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வைகாசி மாத பிரதோஷ விழா நடந்தது.இதையொட்டி மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு பால்,பழம்,பன்னீர், இளநீர்,மஞ்சள்,சந்தனம்,தீர்த்தம் உள்ளிட்ட 16வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி சிலைக்கு தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !