உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசை அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசை அபிஷேகம்

திருவண்ணாமலை: வைகாசி அமாவாசையை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு மஹா அபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி அமாவாசையை முன்னிட்டு, அருணாசலேஸ்வரருக்கு (உற்சவமூர்த்தி) மஹா சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையாருக்கு பல்வேறு வகையான மூலிகை பொடிகள், மஞ்சள், பஞ்சாமிர்தம், 508 லிட்டர் பால், 100 லிட்டர் நெய், 50 லிட்டர் தேன், 25 கிலோ சந்தனம், 50 கிலோ விபூதி மற்றும் பல வண்ண மலர்களால் மஹா அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !