திருத்தனி முருகன் கோயில் மணிக்கு வயது 100!
ADDED :904 days ago
திருத்தனி : திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. இங்கு மூலவருக்கு தினமும் காலை மற்றும் மாலை அபிஷேக பூஜைகளின் போது கோயில் கொடி மரத்திற்கு அருகில் அமைந்துள்ள வெண்கல மணி அடித்து வழிபாடு நடக்கும். இந்த பழமையான மணி கட்டப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனைமுன்னிட்டு, கோயில் சார்பில் மணிக்கு மலர் மாலை அணிவித்து தீபாராதனை சிறப்பு பூஜைகள் செய்தனர். நூறாண்டுகளாக தினமும் அபிஷேக நேரங்களில் கோவில் மணி ஓசை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவது சிறப்பாகும்.