வைகாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினர்
ADDED :1246 days ago
ராமேஸ்வரம்: வைகாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
இன்று வைகாசி அமாவாசை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். இவர்கள் முதலில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டிய கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்தக் கடலில் சிவ சிவ என கோஷமிட்டபடி புனித நீராடினார்கள். இதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு அபிஷேகம், பூஜையில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.