உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் கார்த்திகை விழா

சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் கார்த்திகை விழா

சின்னாளபட்டி: வைகாசி கார்த்திகையை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், சதுர்முக முருகனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா அபிஷேகம் நடந்தது. உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !