திருப்பம் தரும் திருவேங்கடமலை
ADDED :982 days ago
ஆழ்வார்களில் ஒருவர் நம்மாழ்வார். பெரிய தவசீலரான இவர், ஒரு பாசுரத்தில் திருவேங்கட மலையின் சிறப்பை கூறுகிறார்.
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.
நீங்கள் திருப்பதி கூட செல்ல வேண்டாம். இருந்த இடத்தில் இருந்து அந்த மலையைத் வணங்கினால்கூட, உங்களது வினைகள் ஓய்ந்துவிடும். அதற்கு தேவை நல்ல மனம். ஆம்! யாருக்கும் எந்தவித தீங்கும் செய்ய மாட்டேன் என்ற மனதுடன் வணங்கினாலே போதும். வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும்.