நாணம் நன்மையானது
ADDED :928 days ago
மனிதர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று நாணம். இதனை கைவிட்டவர்களே தவறுகளை பயப்படாமல் செய்கின்றனர். ‘நாம் ஒரு தவறு செய்தால், பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்களோ..’ என இவர்கள் நினைப்பதில்லை.
தோழர் ஒருவர் தன் சகோதரன் வெட்கப்படுவதை கண்டித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற நபிகள் நாயகம், ‘அவரை கண்டிக்காதீர். நாணம் நன்மையானது’ என்றார்.